உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காலிமனையில் மழைநீர் தேக்கம் கோனேரியில் கொசு தொல்லை

காலிமனையில் மழைநீர் தேக்கம் கோனேரியில் கொசு தொல்லை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, மகாலட்சுமி நகர், அறிஞர் அண்ணா நகர் செல்லம் சாலையை சுற்றியுள்ள பகுதியில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இப்பகுதியில், மழைநீர் வெளியேற வடிகால்வாய் வசதி இல்லை. இதனால், காலியாக உள்ள மனையில் மழைநீருடன், அப்பகுதிவாசிகளின் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் சேர்ந்து தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, தனியார் மனையில் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தவும், இப்பகுதியில் மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்தவும், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !