மேலும் செய்திகள்
தீபாவளியை முன்னிட்டுவரும் 5, 6ல் ரேஷன் சப்ளை
01-Oct-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்றும், நாளையும், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளதாக, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு சென்று, ரேஷன் பொருட்கள் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் பணி நடக்கின்றன. மாதந்தோறும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாகனங்களில் பொருட்களை எடுத்துச் சென்று ரேஷன் கடை ஊழியர்கள் வாயிலாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்கள், 20,000 பேருக்கு வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. தீபாவளி பண்டிகையை ஒட்டி, இன்றும், நாளையும் அத்தியாவசியப் பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
01-Oct-2025