உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நெடுஞ்சாலையோரம் படர்ந்து வளர்ந்துள்ள செடிகள் அகற்றம்

நெடுஞ்சாலையோரம் படர்ந்து வளர்ந்துள்ள செடிகள் அகற்றம்

உத்திரமேரூர்:காஞ்சிபுரம்- - உத்திரமேரூர் நெடுஞ்சாலையில், தினமும் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், உத்திரமேரூர் சுற்றுப்புறப் பகுதிகளில், ஒரு மாதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.இதனால் நெடுஞ்சாலையோரத்தில், இருபுறமும் செடி, கொடிகள் படர்ந்து வளர்ந்து, அவ்வழியே செல்லும் வாகனங்களுக்கு, இடையூறு ஏற்பட்டு வந்தன.இதை தவிர்க்க, காஞ்சிபுரம் - -உத்திரமேரூர் நெடுஞ்சாலையில் உள்ள மருத்துவம்பாடி பகுதியில், நேற்று முன்தினம் இருபுறமும் வளர்ந்துள்ள செடிகளை,அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.இதேபோல, கடந்த வாரம், செங்கல்பட்டு - -உத்திரமேரூர் நெடுஞ்சாலையோரத்தில், படர்ந்து வளர்ந்துள்ள செடிகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை