உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  உத்திரமேரூர் சாலை வளைவில் தடுப்புகள் அமைக்க கோரிக்கை

 உத்திரமேரூர் சாலை வளைவில் தடுப்புகள் அமைக்க கோரிக்கை

உத்திரமேரூர்: 23---: உத்திரமேரூரில், ஆபத்தான சாலை வளைவில் தடுப்புகள் அமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூரில், மானாம்பதி செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. பேரூராட்சி அலுவலகம் அருகே செல்லும் இச்சாலையில், ஆபத்தான சாலை வளைவு உள்ளது. இச்சாலை வளைவை ஒட்டி, நான்கு அடி ஆழமுள்ள வடிகால்வாய் உள்ளது. திறந்த நிலையில் உள்ள இக்கால்வாயையொட்டி, தடுப்புகள் ஏதும் இல்லாமல் உள்ளன. இதனால், சாலை வளைவில் செல்லும் வாகனங்கள் நிலைத்தடுமாறி, கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. எனவே, உத்திரமேரூரில், ஆபத்தான சாலை வளைவில் தடுப்புகள் அமைக்க, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை