உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆறாக ஓடும் கழிநீரால் நகரவாசிகள் அவதி

ஆறாக ஓடும் கழிநீரால் நகரவாசிகள் அவதி

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட நெல்லுக்கார தெருவில், மாநகராட்சி அலுவலகம், தியேட்டர், சிக்னல், பேருந்து நிலையம், ஹோட்டல்கள், கோவில்கள் உள்ளன.மாநகராட்சியின் மிக முக்கிய சாலையாக உள்ளது. ஆனால், இச்சாலையில் இரு நாட்களாக கழிவுநீர் வெளியேறி, சாலையோரம் ஆறாக ஓடுகிறது. மாநகராட்சி அலுவலகம் அருகிலிருந்து, ரெட்டை மண்டபம் சிக்னல் வரை சாலையோரம் கழிவுநீர் ஓடுவதால், துர்நாற்றம் வீசுவதாக வாகன ஓட்டிகள், வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.கழிவுநீர் வெளியேறும் காரணத்தை மாநகராட்சி அதிகாரிகள் கண்டறிந்து, சுகாதார பிரச்னை ஏற்படும் முன், அவற்றை சரி செய்ய வேண்டும் என நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி