சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சி அண்ணா பேருந்து நிலையத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், 36வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கலைச்செல்வி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் ஆகியோர், நேற்று துவக்கி வைத்தனர்.இதில், 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்று, சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதை தொடர்ந்து, ஓட்டுநர்தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் போக்குவரத்துகழக பணிமனைகளில் பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு சால்வை, இனிப்புகள் மற்றும் பூ கொடுத்து கவுரவித்தனர்.இந்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக பச்சையப்பன் பள்ளியை அடைந்தது. விபத்தில்லா பயணம் மேற்கொள்ளவும், விதிகளை கடைப்பிடிக்கவும் முழக்கங்கள் எழுப்பியபடி பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.