உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  1,340 பயனாளிகளுக்கு ரூ.13 கோடி கடனுதவி

 1,340 பயனாளிகளுக்கு ரூ.13 கோடி கடனுதவி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கூட்டுறவு வார விழாவில், 1,340 பயனாளிகளுக்கு, 13.58 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, கைத்தறி துறை அமைச்சர் காந்தி நேற்று வழங்கினார். காஞ்சிபுரம் செவிலிமேடில், கூட்டுறவு துறை சார்பில் சர்வதேச கூட்டுறவு ஆண்டை முன்னிட்டு, 72வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா, மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் தலைமையில் நேற்று நடந்தது. இவ்விழாவில் 1,111 உறுப்பினர்களுக்கு 10.96 கோடி மதிப்பீட்டில் மகளிர் சுயஉதவிக் குழுக் கடன், 37 பயனாளிகளுக்கு 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்புக் கடன், 53 பயனாளிகளுக்கு 39 லட்சம் ரூபாய் மதிப்பில் பயிர்க்கடன். பத்து பயனாளிகளுக்கு 5 லட்சம் மதிப்பில் சிறு வணிகக் கடன் 20 பயனாளிகளுக்கு 1.33 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டு அடமானக்கடன் என, மொத்தம் 1,340 பயனாளிகளுக்கு, 13.58 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும், மாவட்ட அளவில் சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாராட்டு கேடயங்களும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களையும் அமைச்சர் காந்தி வழங்கினார் இவ்விழாவில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் உத்திரமேரூர் சுந்தர், காஞ்சிபுரம் எழிலரசன், மேயர் மகாலட்சுமி, ஒன்றியக் குழு தலைவர்கள் மலர்க்கொடி, தேவேந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் யோகவிஷ்ணு உட்பட பலரும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ