உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நிழற்குடை அமைக்க ரூ.6.3 லட்சம் ஒதுக்கீடு

நிழற்குடை அமைக்க ரூ.6.3 லட்சம் ஒதுக்கீடு

உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம், காவாம்பயிர் கிராமத்தில் செல்லும், வெங்கச்சேரி - திருமுக்கூடல் சாலையில், பயணியர் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இங்கு, நெய்யாடுபாக்கம், வயலக்காவூர், வெங்கச்சேரி, திருமுக்கூடல் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் நின்று செல்கின்றன.பயணியர் நிழற்குடை பராமரிப்பு இல்லாமல், சேதமடைந்து சிமென்ட் கான்கிரீட் உதிர்ந்து, இரும்புக்கம்பி வெளியே தெரிந்தது. சேதமடைந்துள்ள பயணியர் நிழற்குடையை அகற்றி புதிய நிழற்குடை அமைக்க வேண்டும், என, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, புதிய நிழற்குடை அமைக்க, சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 6.3 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.புதிய பயணியர் நிழற்குடை கட்டும் பணி விரைவில் துவங்க உள்ளதாக, உத்திரமேரூர் ஊரக வளர்ச்சித் துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை