உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஊரக வளர்ச்சி உதவியாளர் வரும் 22, 23ல் நேர்காணல்

ஊரக வளர்ச்சி உதவியாளர் வரும் 22, 23ல் நேர்காணல்

காஞ்சிபுரம்: ஊரக வளர்ச்சி துறையில், ஐந்து அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு, வரும் 22, 23ம் தேதிகளில், நேர்காணல் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதில், காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், இரண்டு அலுவலக உதவியாளர்கள்; குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத் ஆகிய மூன்று வட்டார வளர்ச்சி அலுவலகங்களில், தலா, ஒரு அலுவலக உதவியாளர் என, மொத்தம், ஐந்து அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு, மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அந்த ஐந்து அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு, 725 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், 117 விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் கட்டணம் செலுத்தவில்லை. அதனால், அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மீதி, 608 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு, வரும் 22, 23ம் தேதிகளில் நேர்காணல் நடைபெற உள்ளது. இதில், அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய தலைவர், துணை தலைவர் ஆகியோர் நேர்காணல் நடத்த உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை