மேலும் செய்திகள்
சங்கரா பல்கலையில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்
20-Aug-2025
காஞ்சிபுரம்:மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கும், தொழில்முறை வெளிபாட்டிற்கும் வலுவான தளமாக அமையும் வகையில், இந்திய விமான நிலைய ஆணையத்துடன், காஞ்சிபுரம் சந்திர சேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய விமான நிலைய ஆணையத்துடன், காஞ்சிபுரம் ஏனாத்துாரில் உள்ள சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வமஹா வித்யாலயா பல்கலை, தன் மாணவர்களுக்கு விமான நிலைய துறையில் நேரடி அனுபவம் கிடைக்கும் வகையிலும், விமான நிலைய செயல்பாடுகள் நேரடி காட்சி பயிற்சி, பயிற்சி பட்டறை, தொழில் நிறுவனம் பார்வை, தொழில் சுற்றுப்பயணம் உள்ளிட்டவற்றுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத் தானது. இதன் மூலம், பொறியியல், கலை மற்றும் அறிவியல், சட்ட பிரிவுகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெற உள்ளனர். மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்கும், தொழில்முறை வெளிப்பாட்டிற்கும் வலுவான தளமாக அமையும் என, சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வமஹா வித்யாலயா பல்கலை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
20-Aug-2025