உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பள்ளி நுாற்றாண்டு விழா

பள்ளி நுாற்றாண்டு விழா

காஞ்சிபுரம், காஞ்சிபுரம், காந்தி சாலை, மாநகராட்சி துவக்கப் பள்ளியின் 100வது ஆண்டு விழா, பள்ளி தலைமை ஆசிரியை கஜலட்சுமி தலைமையில் நேற்று நடந்தது.இதில், பள்ளி மாணவ- - மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு போட்டிகள், தேர்வுகளில் சிறப்பிடம் பெற்றவர்கள் மற்றும் கலை நிகழச்சியில் பங்கேற்ற மாணவ- - மாணவியருக்கு காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி பரிசு வழங்கினார்.விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி