| ADDED : ஜன 24, 2024 10:02 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, சுங்குவார்சத்திரம் மகரிஷி பன்னாட்டு உறைவிடப் பள்ளியில், அறிவியல் மற்றும் ஓவியக் கண்காட்சி நடந்தது. இதில், மாணவர்களின் அறிவியல் சிந்தனையை வெளிப்படுத்தும் வகையில், ஆய்வு நோக்கில் 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் தங்களின் படைப்புகளை காட்சிப்படுத்தி விளக்கினர்.இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அணுக்கூறு விஞ்ஞானி டேனியல் செல்லப்பா பங்கேற்று, மாணவர்களின் அறிவியல் படைப்புகள் குறித்து கேட்டறிந்து ஆலோசனை வழங்கி வாழ்த்தினார்.மகரிஷி பள்ளிக் குழுமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஆய்வுகள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் நளினி, மகரிஷி பள்ளி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.