உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கிரிக்கெட் போட்டிக்கு ஏப்.,11ல் தேர்வு முகாம்

கிரிக்கெட் போட்டிக்கு ஏப்.,11ல் தேர்வு முகாம்

சென்னை:திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், பல்வேறு வயதினருக்கான தேர்வு போட்டிகளை செங்குன்றம் அடுத்த, எடப்பாளையத்தில் உள்ள கோஜன் கல்லுாரியில் ஏப்., 11ல் துவங்கி, 14ம் தேதி வரை நடக்கிறது.இதில், 12 வயதுக்கு மேற்பட்ட சிறுமியர், 14, 16 மற்றும் 19 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என, மொத்தம் நான்கு பிரிவுகளுக்கு, தனித்தனியாக வெவ்வேறு நாட்களில் தேர்வு முகாம்கள் நடக்கின்றன.திறமையுள்ள கிரிக்கெட் வீரர்கள் தேர்வில் பங்கேற்கலாம். இதற்கான விண்ணப்பங்கள், அம்பத்துார் எம்.டி.எச்., சாலையில் அமைந்துள்ள சங்க அலுவலகத்தில் இம்மாதம் 20ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, வரும் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு, 94444 41817, 98404 82220, 94443 29232 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி