உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆசிரியர்களுக்கான கருத்தரங்கம்

ஆசிரியர்களுக்கான கருத்தரங்கம்

காஞ்சிபுரம்:தொற்றா நோய்கள் பற்றி பள்ளி ஆசிரியர்களுக்கான கருத்தரங்கம் காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் மனோகரன், தொற்றா நோய்களான மாரடைப்பு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் ஆகியவற்றை முறையாக பரிசோதனைகள் செய்து ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொண்டால் பூரண குணமடையலாம் என கூறினார்.காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க முன்னாள் தலைவர் டாக்டர் அரவிந்த், 'மாணவர்களின் மாண்பு' என்ற தலைப்பிலும், திருச்சி இந்திய மருத்துவ சங்க முன்னாள் தலைவர் டாக்டர் ரமேஷ் 'ஏன், எதற்கு' என்ற தலைப்பிலும், திருச்சி இதய சிகிச்சை சிறப்பு வல்லுனர் டாக்டர் சென்னியப்பன் 'வரும் முன் காப்போம்' என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.எஸ்.எஸ்.கே.வி., மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி வரவேற்றார். இதில், 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, சர்க்கரை, ரத்த அழுத்தம், சிவப்பணுக்கள் உள்ளிட்ட பரிசோதனை, ராஜலட்சுமி நீரிழிவு மையத்தால் மேற்கொள்ளப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை