உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சீதா கல்யாண மகோத்சவம் காஞ்சியில் விமரிசை

சீதா கல்யாண மகோத்சவம் காஞ்சியில் விமரிசை

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் சீதாராம பஜனை மண்டலி சார்பில், 33வது ஆண்டு சீதா கல்யாண மகோத்சவம், காமாட்சியம்மன் கோவில் அருகில் உள்ள கொல்லாசத்திரம் திருமண மண்டபத்தில் நடந்தது.உத்சவத்தையொட்டி, கடந்த 1ம் தேதி கணபதி ஹோமம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு சீதா கல்யாணம் என்ற தலைப்பில், கடலுார் ப்ரும்மஸ்ரீ முரளிதர சர்மாஜி உபன்யாசம் நிகழ்த்தினார்.கடந்த 2ம் தேதி கணபதி ஹோமம், கலச ஸ்தாபனம், சுவாசினி விளக்கு பூஜையும், மாலை 4:30 மணிக்கு ப்ரும்மஸ்ரீ ஞானகுரு பாகவதர் குழுவினரின் தோடயமங்களம் குருகீர்த்தனை மற்றும் அஷ்டபதி பஜனை நடந்தது.நேற்று முன்தினம், காலை 8:00 மணிக்கு விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம், தொடர்ந்து, ராமருக்கு லட்சார்ச்சனை, மஹாதீப ஆராதனையும், மதியம் 12:30 மணிக்கு அன்னதானமும், மாலை 4:30 மணிக்கு அஷ்டபதி மற்றும் தாசர் கீர்த்தனையும், இரவு 8:30 மணிக்கு திவ்யநாமம், டோலோத்ஸவம் நடந்தது.நேற்று, காலை 7:00 மணிக்கு உஞ்சவ்ருத்தி பஜனையும், காலை 10:00 மணிக்கு பாகவத ஸம்ப்ரதாய முறைப்படி சீதா கல்யாண உத்சவமும், மாலை 6:00 மணிக்கு சுவாமி வீதியுலாவும், இரவு 7:00 மணிக்கு ஆஞ்சநேயர் உத்சவசம் நடந்தது.இரு நாட்களாக நடந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ஆயக்குடி ஆனந்த கிருஷ்ணன் என்கிற குமார் பாகவதர் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி