| ADDED : பிப் 23, 2024 11:03 PM
அம்பத்துார்:அம்பத்துார், அத்திப்பட்டில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சிவா, 32; தனியார் நிறுவன சுமைதுாக்கும் தொழிலாளி. இவருடன், தாய் ராணி, 72, வசித்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, சிவா மதுபோதையில் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரது தாய் ராணி, வீட்டின் மேல் தளத்தில் வசிக்கும், மகள் மகேஸ்வரியின் குழந்தைகளுடன் பேசிக்கொண்டிருந்தார்.அங்கு சென்ற சிவா, ராணி மற்றும் சகோதரி மகேஸ்வரியிடம், வீடு திரும்பிய தனக்கு உணவு தயார் செய்து வைக்காமல் இருந்தது குறித்து தகராறில் ஈடுபட்டார். இதனால், அதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றியது.ஆத்திரமடைந்த சிவா, அங்கிருந்த காய்கறி வெட்டும் கத்தியால், தாயின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். அதன்பின், வீட்டிற்கு சென்று துாங்கி விட்டார். படுகாயமடைந்த ராணியை, மகள் மகேஸ்வரி மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து விசாரித்த அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார், சிவாவை கைது செய்தனர்.