மேலும் செய்திகள்
ஆஞ்சநேயர் கோவிலில் ஜெயந்தி விழா
23-Dec-2024
காஞ்சிபுரம்,ராம பக்தரான அனுமன் பிறந்த மார்கழி மாதம், அமாவாசை தினமான வரும் 30ம் தேதி, காஞ்சிபுரத்தில் பல்வேறு ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.அதன்படி, காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார்குளம் சஞ்சீவிராயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, மூலவருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் மற்றும் மஹாதீப ஆராதனை நடைபெறுகிறது. ஆங்கில புத்தாண்டு தினமான ஜன., 1ல் காலை 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.காஞ்சிபுரம் சர்வதீர்த்த கிழக்கு கரையில் அனுமந்தீஸ்வரர், யோகலிங்கேஸ்வர் கோவிலில் உள்ள வீர ஆஞ்சநேய சுவாமிக்கு, அனுமன் ஜெயந்தி விழா, வரும் 30ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி, மாலை 4:30 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் மஹாதீப ஆராதனை உள்ளிட்டவை நடக்கிறது.சின்ன காஞ்சிபுரம், திருவள்ளுவர் தெருவில் உள்ள ஆஞ்சநேயருக்கு, காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 11:45 மணிக்கு வெண்ணெய் காப்பு அலங்காரமும்நடக்கிறது.
23-Dec-2024