மேலும் செய்திகள்
சிட்டியம்பாக்கம் பாலப்பணியால் கனரக வாகனங்களுக்கு தடை
13 minutes ago
வீர ஆஞ்சநேயருக்கு 37வது ஆண்டு விழா
17 minutes ago
இன்று இனிதாக
17 minutes ago
கருத்தரங்கம்
18 minutes ago
சென்னை: காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த மாநில ஓபன் சதுரங்க போட்டியில், சிறுவர்கள் உட்பட 560 வீரர் - வீராங்கனையர் உற்சாகமாக பங்கேற்றனர். காஞ்சிபுரம் சதுரங்கம் சங்கம் ஆதரவில், பல்லவா செஸ் அகாடமி சார்பில், மாநில ஓபன் சதுரங்க போட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் வளாகத்தில், நேற்று நடந்தது. இதில், 9, 11, 13, 17 ஆகிய வயது பிரிவுகளின் அடிப் படையில் இரு பாலருக்கும் மற்றும் ஓபன் முறையிலும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட, மாநிலம் முழுதும் இருந்து, சிறுவர்கள், பெரியவர் என, 560 வீரர் -- வீராங்கனையர் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு பிரிவிலும், தலா ஆறு சுற்றுகள் வீதம் போட்டிகள் நடந்தன. வயது பிரிவு வாரியாக வெற்றி பெற்ற முதல் 20 பேருக்கு, கோப்பைகள் வழங்கப்பட்டன.
13 minutes ago
17 minutes ago
17 minutes ago
18 minutes ago