| ADDED : பிப் 22, 2024 11:20 PM
கோனேரிகுப்பம்,காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, மின்நகரில், 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். சின்ன காஞ்சிபுரம், ஆனந்தாபேட்டை உள்ளிட்ட பகுதியில் இருந்து, மாமல்லன் நகர், பழைய ரயில் நிலையம், கோனேரிகுப்பம், வையாவூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வோர் மின் நகர் வழியாக சென்று வருகின்றனர்.வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் நிறைந்த மின்நகரில், 50க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன.போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் படுத்து ஓய்வெடுக்கும் நாய்கள், மின் நகர் வழியாக செல்லும் பாதசாரிகளை பார்த்து குரைக்கின்றன.சைக்கிள் மற்றும் டூ -வீலரில் செல்வோரை குரைத்தபடியே நாய்கள் விரட்டி செல்வதால், பதற்றமடையும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.எனவே, போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், மின் நகரில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடிக்க கோனேரிகுப்பம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.