உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தெருவோர கடைக்காரர்கள் கடன் பெறலாம்: எஸ்.பி.ஐ.,

தெருவோர கடைக்காரர்கள் கடன் பெறலாம்: எஸ்.பி.ஐ.,

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்துார் தனியார் திருமண மண்டபத்தில், எஸ்.பி.ஐ., வங்கி சார்பில், நெசவாளர்களுக்கு கடன் வழங்கும் மேளா நடந்தது. இந்த மேளாவிற்கு, முதன்மை மேலாளர் ரவிரஞ்சன் தலைமை வகித்தார்.துணைமேலாளர் ஆஷித் ரஞ்சன் சின்ஹா​சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 192 பேருக்கு, 2 கோடி ரூபாய் கடனுதவி வழங்கினார்.அதன்பின், அவர் பேசியதாவது:நெசவாளர்களுக்கு கடன் வழங்குவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில், தெருவோர கடைக்காரர்கள் பயன்பெறும் வகையில், 10,000 - 50,000 ரூபாய் வரையில் கடன் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ