உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சார்-பதிவாளர் அலுவலக லிப்ட் பழுது பத்திரம் பதிய வருபவர்கள் அவதி

சார்-பதிவாளர் அலுவலக லிப்ட் பழுது பத்திரம் பதிய வருபவர்கள் அவதி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில், பதிவுத் துறையின் சார்- பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. ஒரே கட்டடத்தில், தரை தளத்தில் இணை சார்-பதிவாளர் எண் 2, முதல் தளத்தில் இணை சார்- பதிவாளர் எண்- 3, ஆகிய அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.முதல் தளத்தில் இயங்கும் இணை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு செல்ல படிக்கட்டு வசதிகள் மட்டுமே இருந்த நிலையில், பொதுப்பணித்துறை சார்பில் லிப்ட் வசதி செய்யப்பட்டன. ஆனால், லிப்ட் அடிக்கடி பழுதாவதால் முதல் மாடியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்திற்கு படிக்கட்டில் ஏறி செல்ல முடியாமல், முதியோர், மாற்றுத்திறனாளிகள் பலரும் சிரமப்படுகின்றனர்.கிரயம், அடமானம், திருமண பதிவு என, பல வகையான பதிவுகள், இந்த அலுவலகத்தில் நடக்கின்றன. இதன் காரணமாக, அன்றாடம் 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் சூழலில், லிப்ட் பழுதாகி இருப்பதால், பலரும் சிரமப்படுகின்றனர்.பழுதாகி கிடக்கும் லிப்டை சரி செய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பத்திரப்பதிவு செய்ய வருவோர் கோரிக்கை விடுக்கின்றனர்.இதுகுறித்து சார் பதிவாளர் அலுவலக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'லிப்ட்டுக்கு வரும் மின்சாரம் சரிவர கிடைப்பதில்லை. வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரு நாளோ இயங்குகிறது. இதுபற்றி, பொதுப்பணித் துறையிடமும், மின்வாரியத்திடமும் நாங்கள் ஏற்கனவே புகார் தெரிவித்துவிட்டோம். மீண்டும் இதுபற்றி புகார் தெரிவித்து லிப்ட் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை