உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உத்திரமேரூர் சுற்றுவட்டாரத்தில் கரும்பு அறுவடை பணி துவக்கம்

உத்திரமேரூர் சுற்றுவட்டாரத்தில் கரும்பு அறுவடை பணி துவக்கம்

உத்திரமேரூர், டசெங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கரும்பு அரவை நேற்று துவங்கியதையடுத்து, உத்திரமேரூர் சுற்றுவட்டார கிராமங்களில், கரும்பு அறுவடை பணிகள் துவக்கப்பட்டுள்ளது. உத்திரமேரூர் ஒன்றியத்தின் பல்வேறு கிராமங்களில், கரும்பு விவசாயம்பிரதான தொழிலாக இருந்து வருகிறது. குறிப்பாக சீட்டணஞ்சேரி, கரும்பாக்கம், சாத்தணஞ்சேரி, பினாயூர், களியப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிக நிலப்பரப்பில் கரும்பு பயிரிடப் படுகிறது.இப்பகுதிகளில் அறுவடையாகும் கரும்புகள், படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அரவைக்கு அனுப்பப்படுகிறது. படாளம் சர்க்கரை ஆலையில். இந்த ஆண்டுக்கான கரும்பு அரவை நேற்று துவங்கியது.இதையொட்டி, சீட்டணஞ்சேரி, கரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் கரும்பு அறுவடை துவக்கப்பட்டுள்ளது.கரும்பு வெட்ட ஆட்கள்தட்டுப்பாடு நிலவுவதால், ஆலை நிர்வாகம் சார்பில்கூடுதலாக கரும்புஅறுவடை இயந்திரம் வழங்கப்படுமா என, கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை