உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் கைது

காஞ்சிபுரம்:உத்திரமேரூர் தாலுகா, ஆர்.என்.,கண்டிகை கிராமத்தில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு, அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த, 13 வயதுள்ள மாணவி, எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.இவரிடம், சமூக அறிவியல் பாடம் நடத்தும் ஆசிரியர் குப்பன், 57. என்பவர், மாணவியை பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.மன உளைச்சலில் இருந்து வந்த சிறுமி, இதுபற்றி, தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், மாணவியின் தாய், புகார் அளித்தார். மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தியதை தொடர்ந்து, ஆசிரியர் குப்பனை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை