| ADDED : ஜன 17, 2024 10:33 PM
கொருக்குப்பேட்டை:திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மேரி, 48. இவர், நேற்று தண்டையார்பேட்டையில் உள்ள சர்ச்சுக்கு சென்றுவிட்டு, வீடு திரும்ப தண்டையார்பேட்டை ரயில் நிலையம் வந்துள்ளார்.அப்போது, தண்டையார்பேட்டை ரயில் நிலைய தண்டவாளத்தில் சரக்கு ரயில் நின்றுள்ளது. இதனால், மேரி சரக்கு ரயிலின் கீழே குனிந்து வர முயன்றபோது திடீரென ரயில் புறப்பட்டது.இதனால், பதற்றமடைந்த மேரி அவசரமாக வெளியேற முயன்றபோது, இடது கை சிக்கி மூன்று விரல்கள் துண்டாகின. அவரது கணவர் மனோகர், மேரியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.இது குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.