உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கூரத்தாழ்வான் மஹோற்சவம் புஷ்ப பல்லக்குடன் நிறைவு

கூரத்தாழ்வான் மஹோற்சவம் புஷ்ப பல்லக்குடன் நிறைவு

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் அடுத்த, கூரம் கிராமத்தில், ஆதிகேசவ பெருமாள் மற்றும் கூரத்தாழ்வான் கோவில் உள்ளது. இக்கோவிலில் 1,014வது திருவவதார மஹோற்சவம் கடந்த மாதம் 22ல், திருப்பல்லக்கு ஆஸ்தான புறப்பாடுடன் துவங்கியது.தினமும் காலையில் பல்லக்கிலும், இரவு பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிய கூரத்தாழ்வான் முக்கிய வீதி வழியாக உலா வந்தார். இதில், ஒன்பதாம் நாள் உற்சவமான ஜன., 30ல் தேரோட்டம் விமரிசையாக நடந்தது.இதில், 13வது நாளான நேற்று முன்தினம் காலை, விடையாற்றி 3ம் நாள் திருமஞ்சனமும், இரவு புஷ்ப பல்லக்கு உற்சவம் நடந்தது.இதில், மல்லி, முல்லை, கனகாம்பரம், சம்பங்கி, ரோஜா உள்ளிட்ட மலர்களில் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் எழுந்தருளிய கூரத்தாழ்வான் வீதியுலா வந்தார்.புஷ்ப பல்லக்கு உற்சவத்துடன் 13 நாட்களாக நடந்து வந்த கூரத்தாழ்வானின் 1,014வது திருவவதார மஹோற்சவம் நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை