உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வரதராஜ பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம் துவக்கம்

வரதராஜ பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம் துவக்கம்

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில், மார்கழி மாத வைகுண்ட ஏகாதசிக்கு, 10 நாட்களுக்கு முன், பகல் பத்து உற்சவமும், பின் 10 நாட்கள் ராபத்துஉற்சவமும் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, பகல் பத்து உற்சவம் இன்று துவங்குகிறது. இதில், இன்று மதியம் ஆழ்வார்கள், மூலவர் சன்னிதி முன் எழுந்தருள்கின்றனர். அப்போது, வேத சாற்றுமறை நடைபெறுகிறது. தொடர்ந்து, ஆழ்வார்களுக்கு மரியாதை செய்யப்பட உள்ளது. ஜன., 9ம் தேதி வரை பகல் பத்து உற்சவம் நடக்கிறது.ஜன., 10ம் தேதி வைகுண்ட ஏகாதசி நடைபெறுகிறது. இதில், காலை முதல் மதியம் வரை வரதராஜ பெருமாள் ரத்ன அங்கி சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.தொடர்ந்து 10 நாட்களுக்கு ராபத்து உற்சவம் நடக்கும். இதில், மாலை 6:00 மணிக்கு கோவில் ராஜகோபுரம் அருகில் உள்ள நான்கு கால் மண்டபத்தில் பெருமாள் எழுந்தள்வார். இரவு 7:30 மணி வரை சாற்றுமறை நடக்கும்.பின், கோவில் உட்பிரகாத்தில் உள்ள கிளி மண்டபத்தில் பெருமாள் எழுந்தருள்வார். சுவாமியுடன் ஆழ்வார்களும் எழுந்தருள்வர். கடைசி நாளில், நம்மாழ்வார், பெருமாள் திருவடிதொழல் நிகழ்ச்சி நடக்கும். விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை