உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திருடனை மடக்கி பிடித்த ரோந்து போலீஸ்காரர்கள்

திருடனை மடக்கி பிடித்த ரோந்து போலீஸ்காரர்கள்

சென்னை:புரசைவாக்கம், பெருமாள் கோவில் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் ஹன்ஸ்ராஜ், 51. இவர், ஓட்டேரியில் ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில், கடைக்குள் திடீரென புகுந்த ஒருவர், கல்லா பெட்டிக்குள் வைத்திருந்த 3,800 ரூபாயை திருடிக் கொண்டு தப்பினார். திருடனை பிடிக்க கடையில் இருந்தவர்கள் முயன்ற நிலையில், அவ்வழியே வந்த ரோந்து போலீஸ்காரர்கள், திருடனைகையும் களவுமாக மடக்கிப் பிடித்தனர்.திருட்டில் ஈடுபட்ட நபர் சூளை, கோவிந்தன் சாலையைச் சேர்ந்த, 'பாட்டில்' மணி என்ற மணிகண்டன், 19, என தெரிந்தது. இதையடுத்து, மணிகண்டனை ஓட்டேரி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை