| ADDED : பிப் 17, 2024 11:34 PM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் மாசி பிரம்மோற்சவத்தை ஒட்டி, தினமும் காலை, மாலையில், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் காமாட்சியம்மன், நான்கு ராஜ வீதிகளிலும் உலா வருவார். வழிநெடுகிலும் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அம்மன் வீதியுலா செல்லும் நான்கு ராஜ வீதிகளிலும், கடந்தாண்டு பெய்த பருவமழை மற்றும் கனரக வாகனங்கள் சென்றதால், சாலையில் ஆங்காங்கே சேதமடைந்து சிறு சிறு பள்ளங்கள் ஏற்பட்டன.இதனால், அம்மன் வீதியுலா செல்லும்போது சாலையில் உள்ள பள்ளங்களால் இடையூறு ஏற்பட்டது. எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை சார்பில், 'பேட்ச் ஒர்க்' பணியாக நான்கு ராஜ வீதிகளிலும் சேதமடைந்த பகுதிகளில், தார் ஊற்றி நேற்று சீரமைக்கப்பட்டது.