உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலை, கால்வாய் வசதி இல்லாத தணிகைவேல் நகரின் அவலம்

சாலை, கால்வாய் வசதி இல்லாத தணிகைவேல் நகரின் அவலம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு பள்ள காலனி அருகே உள்ள தணிகைவேல் நகரில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில், சாலை மற்றும் வீட்டு உபயோக கழிவு நீர், மழை நீர் வடிய வடிகால்வாய் வசதி ஏற்படுத்தப்படவில்லை.இதனால், வீட்டில் இடவசதி உள்ளவர்கள், காலியான இடத்தில் தோட்டம் அமைத்து, வீட்டு உபயோக கழிவுநீரை செடி, கொடிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இடவசதி இல்லாதவர்கள் கழிவுநீரை சாலையில் விடுகின்றனர்.இதனால், பாதசாரிகள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மண் சாலையாக உள்ளதால், மழைக்காலத்தில் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.எனவே, தணிகைவேல் நகரில் சாலை வசதி ஏற்படுத்துவதோடு, வீட்டு உபயோக கழிவு நீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வகையில், வடிகால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி