இளையனார்வேலுாரில் நாளை தெப்போற்சவம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த இளையனார்வேலுாரில் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், தை மாதத்தில் தெப்போற்சவம் மூன்று நாட்கள் நடைபெறும்.அதன்படி, 13ம் ஆண்டு தெப்போற்சவம் நாளை துவங்குகிறது. தெப்போற்சவத்தையொட்டி, மாலை 4:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடக்கிறது.மாலை 6:00 மணிக்கு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், மலர் அலங்காரத்தில் பாலசுப்பிரமணியசுவாமி எழுந்தருளி உலா வருகிறார். மூன்றாம் நாளான, வரும் 8ம் தேதி தெப்போற்சவம் நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர், அறங்காவலர் குழுவினர் இணைந்து செய்து வருகின்றனர்.