UPDATED : ஆக 22, 2024 06:50 AM | ADDED : ஆக 22, 2024 12:51 AM
காஞ்சிபுரம்:தமிழகத்தின் தெற்கு, மேற்கு மாவட்டங்களுக்கு, காஞ்சிபுரத்திலிருந்து எஸ்.இ.டி.சி.,எனப்படும் விரைவு பேருந்து சேவை இல்லாதது பயணியருக்கு நீண்ட நாட்களாகவே சிரமத்தை அளித்து வருகிறது. பேருந்து பிடிக்க செங்கல்பட்டு, பெருங்களத்துார் செல்ல வேண்டிய அவலநிலை நீடிக்கிறது.சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களில், தொழில் வளர்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக காஞ்சிபுரம் உள்ளது. வியாபார நோக்கத்திற்காகவும், சுற்றுலா, கோவில் போன்ற காரணத்திற்காகவும் ஏராளமான வெளியூர்வாசிகள் காஞ்சிபுரம் வந்து செல்கின்றனர்.அதேபோல், காஞ்சிபுரத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கும், மேற்கு மாவட்டங்களுக்கும் ஏராளமானோர் செல்கின்றனர்.அவ்வாறு, தெற்கு, மேற்கு மாவட்டங்களுக்கு செல்ல விரும்பும் பயணியருக்கு, எஸ்.இ.டி.சி.,எனப்படும் அரசு விரைந்து பேருந்துகள், காஞ்சிபுரத்திலிருந்து இயக்கப்படாதது, வெளியூர் செல்லும் பயணியருக்கு மிகுந்த சிரமத்தை அளித்து வருகிறது.மாவட்ட தலைநகரான காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து, சுற்றியுள்ள மாவட்டங்களுக்கும், அருகில் உள்ள கிராமப்புறங்களுக்கும் என, ஒரு நாளைக்கு 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், தொலைதுார பேருந்துகள் இயக்கப்படாதது, பயணியருக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.சாதாரண இருக்கைககள்