உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தேவார இன்னிசை அரங்கேற்றம்

தேவார இன்னிசை அரங்கேற்றம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் முத்தீஸ்வரர் கோவிலில், இசைஞான மாணவ- - மாணவியர் பங்கேற்ற தேவார இன்னிசை அரங்கேற்றம், திருநெறிய தமிழிசை விழா என்ற பெயரில் நடந்தது.அரசு இசை பள்ளி தேவார ஆசிரியர் சிவ ராஜபதி ஓதுவார் தலைமையில் நடந்த இவ்விழாவில், 20க்கும் மேற்பட்ட இசைஞான மாணவ- - மாணவியர் மற்றும் மாவட்ட அரசு இசைபள்ளி தேவார மாணவர்கள் தேவார இன்னிசை நிகழ்த்தினர்.இதில், மாவட்ட அரசு இசை பள்ளி வயலின் வித்வான் சுப்ரமோனி, முழவிசை வித்வான் கார்த்திகேயன், முகர்சிங் வித்வான் சரவணன் உள்ளிட்டோர் இசை நிகழ்த்தினர்.மாவட்ட அரசு இசை பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமணி, தெய்வ சேக்கிழார் அறக்கட்டளை நிறுவனர் அண்ணா சச்சிதானந்தம், வாசீகர் பேரவை நிறுவனர் நாகராஜன் உள்ளிட்டோர் தேவார இன்னிசை அரங்கேற்றம் செய்த மாணவ- - மாணவியருக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினர். விழாவில், ஓதுவா மூர்த்திகள், இசை ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ