உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கஞ்சா கடத்திய மூவர் கைது

கஞ்சா கடத்திய மூவர் கைது

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, சுங்குவார்சத்திரம் அடுத்த பாப்பாங்குழி கிராமத்தில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.நேற்று காலை, பாப்பாங்குழி மாரியம்மன் கோவில் அருகே போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு நின்றுக் கொண்டிருந்த நான்கு பேரில் ஒருவர் மட்டும் போலீசாரை பார்த்தவுடன் தப்பியோடினார்.மூன்று பேரை பிடித்த போலீசார், அவர்களிடம் சோதனை நடத்தியதில், 4.5 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. விசாரணையில், பாப்பாங்குழியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் இருந்து கஞ்சாவை வாங்கி, வடமாநில இளைஞர்களிடம் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.இதையடுத்து, 50,000 ரூபாய் மதிப்புள்ள 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, சந்தவேலுாரைச் சேர்ந்த வேலு, 23, ரங்கநாதன், 27, மொளச்சூர் மகேஷ், 26, உள்ளிட்டோரை கைது செய்த போலீசார், தப்பியோடிய குணசேகரனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி