உள்ளாட்சி பிரதிநிதிகள் மூன்று நாள் சுற்றுப்பயணம்
காஞ்சிபுரம்:வாலாஜாபாத் ஒன்றியத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள் 10 பேர், மற்ற மாவட்டங்களுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் செல்கின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஐந்து ஒன்றிய குழுக்களின் சேர்மன்கள், 274 ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல நிலை அலுவலர்கள் 10 பேர் நேற்று, தஞ்சாவூர் மாவட்டத்திற்கும், இன்று நாகை மாவட்டத்திற்கும், நாளை திருவாரூர் மாவட்டத்திற்கும் சுற்றுப்பயணம் செய்கின்றனர்.பசுமை கிராமம், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு, குடிநீர் மேலாண்மை ஆகிய பணிகள் எப்படி நடக்கின்றன என்பதை இவர்கள் கண்காணித்து, தங்கள் அதிகாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் செயல்படுத்த உள்ளனர்.