உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  பழங்குடியின மக்களுக்கு ரூ.19 லட்சத்தில் கழிப்பறை

 பழங்குடியின மக்களுக்கு ரூ.19 லட்சத்தில் கழிப்பறை

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அருகே, கொளத்துார் ஊராட்சியில் உள்ள 42 பழங்குடியின குடும்பங்களுக்கு, தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், தலா, 45,000 ரூபாய் செலவில் கட்டப்பட்ட கழிப்பறைகள் பயனாளிகளிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன. ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், கொளத்துார் ஊராட்சிக்குட்பட்ட, கே.கே., நகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு, 'ஹபிட்டா மற்றும் வி.ஆர்.,வாட்டர்' என்ற தனியார் அமைப்பு மூலம், தலா, 45,000 ரூபாய் செலவில், 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 42 பழங்குடியின குடும்பங்களுக்கு கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதை, பயனாளிகளிடம் ஒப்படைக்கும் விழா நேற்று நடந்தது. இதில், தொண்டு நிறுவன மேலான் குழுவினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை