உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  கிருஷ்ணா வித்யா மந்திர் பள்ளியில் இரண்டு நாள் அறிவியல் கண்காட்சி

 கிருஷ்ணா வித்யா மந்திர் பள்ளியில் இரண்டு நாள் அறிவியல் கண்காட்சி

காஞ்சிபுரம்: பணப்பாக்கம் கிருஷ்ணா வித்யா மந்திர் பள்ளியில், இன்றும், நாளையும் அறிவியல் கண்காட்சி நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த, பணப்பாக்கம் பகுதியில், கிருஷ்ணா வித்யா மந்திர் பள்ளி உள்ளது. இங்கு, இன்றும், நாளையும் அறிவியல் கண்காட்சி நடைபெற உள்ளது. இதில், அறிவியல் படைப்புகள், கோளரங்கம் உள்ளிட்ட பல வகையான மாணவர்களின் படைப்புகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன. பள்ளி மாணவ - மாணவியர், பெற்றோர், பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பினர் வந்து, காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையில், இந்த கண்காட்சியை கண்டு, மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கலாம். மேலும், விபரங்களுக்கு 91760 27777 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, பள்ளி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை