உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  பழையசீவரம் ரயில் நிலையத்தில் நிழற்கூரை அமைக்க வலியுறுத்தல்

 பழையசீவரம் ரயில் நிலையத்தில் நிழற்கூரை அமைக்க வலியுறுத்தல்

வாலாஜாபாத்: பழையசீவரம் ரயில் நிலையத்தில் நிழற்கூரை இல்லாததால், மழை மற்றும் வெயிலில் பயணியர் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, நிழற்கூரை அமைக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர். செங்கல்பட்டு - காஞ்சிபுரம் ரயில்வே தடத்தில் பழையசீவரம் ரயில் நிலையம் உள்ளது. பழையசீவரம் மற்றும் அதை சுற்றி உள்ள பல கிராமங்களைச் சேர்ந்தோர், இந்த ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து ரயிலில் பயணித்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், அரக்கோணம், திருமால்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். பழையசீவரம் ரயில் நிலையத்தில் நிழற்கூரை இல்லாததால், ரயிலில் பயணிக்க வரும் பயணியர் நடைமேடையில் காத்திருக்கும்போது, மழை நேரங்களில் ஒதுங்க இடம் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளும் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழையசீவரம் ரயில் நிலைய நடை மேடையில் நிழற்கூரை மற்றும் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை