உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / துப்புரவு பணிக்காக தள்ளு வண்டிக்கு பதில் பேட்டரி வாகனங்கள் கூடுதலாக்க வலியுறுத்தல்

துப்புரவு பணிக்காக தள்ளு வண்டிக்கு பதில் பேட்டரி வாகனங்கள் கூடுதலாக்க வலியுறுத்தல்

வாலாஜாபாத்,:வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், 200க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இத்தெருக்களில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பையை பேட்டரி வாகனம் மற்றும் தள்ளு வண்டிகள் வாயிலாக துப்புரவு பணியாளர்கள் பெற்று செல்கின்றனர்.அவ்வாறு சேகரிக்கும் குப்பை, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ், மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது. மட்காத குப்பை் மறு சுழற்சி முறைக்கும், மட்கும் குப்பை இயற்கை உரம் தயாரித்தல் போன்றவைக்கும் பயன்படுத்தப்படுகிறது.வாலாஜாபாத் பேரூராட்சியில் இவ்வாறான பணிகள் மேற்கொள்ள, 70 பேர் துப்புரவு தொழிலார்களாக சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர்.வாலாஜாபாத் பேரூராட்சி குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றும் குப்பையை பெற்று செல்ல 30 தள்ளு வண்டிகள் மற்றும் 10 பேட்டரி வாகனங்கள் உள்ளன.இதில், தள்ளு வண்டிகளை நகர்த்தி செல்வதில் சிரமம் உள்ளதாகவும், இதனால், பேட்டரி வாகனங்களை கூடுதலாக்க வேண்டும் என, துப்பரவு பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி