உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பராமரிப்பு இல்லாத ஒரகடம் குளம் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்

பராமரிப்பு இல்லாத ஒரகடம் குளம் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடத்தில் பராமரிப்பு இல்லாமல் பல ஆண்டுகளாக சீரழிந்து வரும் குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குன்றத்துார் ஒன்றியம், சென்னக்குப்பம் ஊராட்சியில், ஒரகடம் மேம்பாலம் அருகில் குளம் உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இந்த குளம் விளங்கியது.ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா அமைந்த பின், ஒரகடம் சந்திப்பில் கடைகள் மற்றும் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்தன. அதன்பின், குளம் பராமரிப்பின்றி போனது.குளத்தை சுற்றியுள்ள அடுக்குமாடி குடியிருப்பு, உணவகங்கள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, மழைநீர் வடிகால் வாயிலாக குளத்தில் கலக்க விடுகின்றனர்.மேலும், அப்பகுதியில் உள்ள இறைச்சி கடை, உணவகங்கள், டீக்கடைகளில் இருந்து வெளியேறும் குப்பையை குளத்தில் கொட்டி வருகின்றனர்.இதனால், குளத்தின் நீர் மாசடைந்து உள்ளது. மேலும், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.தவிர, குளம் முழுதும் செடி, கொடிகள் வளர்ந்து, ஆகாயத் தாமரை குளத்தை முழுமையாக ஆக்கிரமித்து உள்ளது.எனவே, குளத்தை மீட்டெடுத்து, துார்வாரி, சுற்றுச்சுவர் அமைத்து, நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில், குளத்தைச் சுற்றி நடைபாதை அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி