உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாசி படர்ந்த சின்ன வேப்பங்குளம் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்

பாசி படர்ந்த சின்ன வேப்பங்குளம் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி 22வது வார்டு, திருக்காலிமேட்டில் உள்ள சின்ன வேப்பங்குளம் அப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன், திருக்காலிமேடினர், வீட்டு உபயோக தேவைக்கு இக்குளத்து நீரை பயன்படுத்தி வந்தனர்.பின், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு, வீடுகளுக்கு நிலத்தடியில் புதைக்கப்ப்டட குழாய் வாயிலாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டபின், குளத்து நீரை பயன்படுத்துவதை கிராமத்தினர் தவிர்த்து விட்டனர்.இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், குளத்தில் செடி, கொடிகள், கோரைப்புல் வளர்ந்து பாசி படர்ந்து, குளத்து நீர் மாசடைந்து வருகிறது.எனவே, சீரழிந்து வரும் சின்ன வேப்பங்குளத்தை துார்வாரி சீரமைக்கவும், குளக்கரையில் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருக்காலிமேட்டினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை