உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தி.மு.க., ஒன்றிய குழு தலைவரை கண்டித்து வி.சி.,யினர் ஆர்ப்பாட்டம்

தி.மு.க., ஒன்றிய குழு தலைவரை கண்டித்து வி.சி.,யினர் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீபெரும்புதுார்: வி.சி., ஒன்றிய கவுன்சிலர் எல்லைக்குட்பட்ட ஊராட்சிகளுக்கு, அரசு திட்டங்கள் மற்றும் பணிகளை ஒதுக்கீடு செய்யாத, தி.மு.க., ஒன்றிய குழு தலைவர் கருணாநிதியை கண்டித்து, ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையம் அருகே, வி.சி.,யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியக் குழு, இரண்டாவது வார்டுக்குட்பட்ட நெமிலி, கிளாய், செங்காடு, ஆகிய மூன்று ஊராட்சிகளில் எட்டு கிராமங்கள் உள்ளன. இங்கு, வி.சி.வைச், சேர்ந்த தியாகராஜன் ஒன்றிய குழு கவுன்சிலராக உள்ளார். இந்த நிலையில், 2வது வார்டுக்குட்பட்ட பகுதிகளுக்கு, சாலை, குடிநீர், கனவு இல்லம் திட்டம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தவில்லை எனவும், தி.மு.க., பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், எந்த ஒரு அரசு திட்டங்களும் ஒதுக்காத, ஸ்ரீபெரும்புதுார் தி.மு.க., ஒன்றிய குழு தலைவர் கருணாநிதியை கண்டித்து, வி.சி., மாவட்ட தலைவர் மேனகாதேவி தலைமையில், ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையம் அருகே, வி.சி., வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வி.சி.,வினர் 50 பேர், தி.மு.க., ஒன்றிய குழு தலைவர் கருணாநிதியை கண்டித்து, பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை