உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வேப்பங்குளக்கரை சாலை சேதம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

வேப்பங்குளக்கரை சாலை சேதம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

காஞ்சிபுரம் : சின்ன காஞ்சிபுரம் பகுதியில் இருந்து மாமல்லன் நகர், மின் நகர், ரயில் நிலையம், அரசு மருத்துவமனைக்கு செல்வோர் திருக்காலிமேடு, சின்ன வேப்பங்குளத்தை ஒட்டியுள்ள மேற்கு பகுதி சாலை வழியாக சென்று வருகின்றனர்.பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லுாரி மாணவ- - மாணவியர் அதிகளவு செல்லும் சாலையில், குளக்கரை ஒட்டியுள்ள பகுதியில் சிமென்ட் சாலை பெயர்ந்து சேதமடைந்த நிலையில் உள்ளது.இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலை சேதமடைந்த பகுதியில் நிலைதடுமாறி, தடுப்புச் சுவர் இல்லாத குளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை