உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  களக்காட்டூரில் புதிய சிவாலயம் விஜயேந்திரர் நாளை திறந்து வைக்கிறார்

 களக்காட்டூரில் புதிய சிவாலயம் விஜயேந்திரர் நாளை திறந்து வைக்கிறார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிவாலயத்தை, காஞ்சிபுரம் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நாளை திறந்து வைக்கிறார். காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, களக்காட்டூரில், காஞ்சிபுரம் பிரம்மா குமாரிகள் அமைப்பு சார்பில், இரண்டு அடுக்குகளுடன் புதிதாக சிவாலயம் கட்டப்பட்டுள்ளன. இங்கு 12 ஜோதிர்லிங்கம், சகஸ்ரலிங்க கோடி லிங்கம், சொர்க்கத்தின் தத்ரூப காட்சி, ராஜயோக தியான பட விளக்க கண்காட்சி, ஒளி, ஒலி அலங்காரம், ராஜயோக தியான அறை, ஆன்மிக புத்தக கண்காட்சி உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் பிரம்மா குமாரிகளின் வெள்ளி விழா நிகழ்ச்சியாக, புதிய சிவாலயம் திறப்பு விழா, நாளை, மாலை 4:00 மணிக்கு நடக்கிறது. இதில், காஞ்சிபுரம் மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திறந்து வைக்கிறார். இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், தமிழ்நாடு, தென் கேரளம், புதுச்சேரி பிரம்மா குமாரிகள் சேவை ஒருங்கிணைப்பாளர் பீனா ஜி, உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர், காஞ்சிபுரம் தி.மு.க., -- எம்.பி., செல்வம், காஞ்சிபுரம் ஒன்றிய உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். விழாவிற்கான ஏற்பாட்டை காஞ்சிபுரம் பிரம்மா குமாரிகள் அமைப்பினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை