உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாஸ்போ போட்டிகள் பிப்., 13ல் துவக்கம்

வாஸ்போ போட்டிகள் பிப்., 13ல் துவக்கம்

சென்னை : சென்னையில், மகளிர் கல்லுாரிகளுக்கு இடையிலான, 'வாஸ்போ' விளையாட்டு போட்டிகள், பிப்., 13ம் தேதி துவங்குகின்றன.எம்.ஓ.பி., வைஷ்ணவ் கல்லுாரி சார்பில் ஆண்டுதோறும், 'வாஸ்போ' என்ற தலைப்பில், பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.அந்த வகையில், 'வாஸ்போ' 2023 - 24ம் ஆண்டிற்கான விளையாட்டு போட்டிகள், வரும் பிப்., 13 மற்றும் 14ம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.இந்தாண்டு பேட்மின்டன், பால் பேட்மின்டன், கூடைப்பந்து, சதுரங்கம், டேபிள் டென்னிஸ் மற்றும் வாலிபால் போட்டிகள் நடக்கின்றன.இதில், சென்னை மாவட்டத்தில் உள்ள ஏராளமான மகளிர் கல்லுாரி அணிகள் பங்கேற்கின்றன.ஒவ்வொரு போட்டியிலும், முதல் மூன்று இடங்களை வெல்லும் அணிகளுக்கு, ரொக்க பரிசுகள் வழங்கப்பட உள்ளன. போட்டியில் பங்கேற்க நுழைவுக் கட்டணம் கிடையாது. பங்கேற்க விரும்பும் அணிகள், எம்.ஓ.பி., கல்லுாரியின் உடற்கல்வித்துறை இயக்குனர் அமுதாவை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ