மேலும் செய்திகள்
பயன்பாடற்ற பழைய ரேஷன் கடை அகற்றப்படுமா?
09-Mar-2025
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் நகராட்சிக்குட்பட்ட என்.ஜி.ஓ., காலனி பகுதியில் 100க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. 2011 - 12ம் நிதியான்டில், ஸ்ரீபெரும்புதுார் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், இப்பகுதியில் ரேஷன் கடை கட்டப்பட்டது.இப்பகுதி மக்களுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ், இந்த ரேஷன் கடையில் அரிசி, பரும்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், ரேஷன் கடைக்கு வரும் பயனாளிகள், பொருட்கள் வாங்க ஜன்னல் வழியே ‛பில்' போட காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.ரேஷன் கடை வெளியில் கூரை இல்லாத நிலையில், பெண்கள், வயதானோர் சுட்டெரிக்கும் வெயிலில் நீண்ட நேரம் கத்திருப்பதால் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.ரேஷன் கடை கட்டடத்தில் இரண்டு அறைகள் இருந்தும், ஒரு அறையை பூட்டிவிட்டு ஒரு அறையில் மட்டும் பொருட்கள் வழங்குவதால், ஜன்னல் வழிலே பில் போட வெயிலில் காத்திக்க வேண்டிய நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.எனவே, ரேஷன் கடை கட்டடத்தில் உள்ள மற்றொரு அறையையும் திறந்து பயன்டுத்த வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
09-Mar-2025