மேலும் செய்திகள்
சேதமடைந்த சாலையால் கடும் அவதி
29-Dec-2024
வாலாஜாபாத், வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது குண்ணவாக்கம் கிராமம். இந்த கிராமத்தில் இருந்து, வாலாஜாபாத் - தாம்பரம் பிரதான சாலைக்கு செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையோர பகுதிகளில், தனியாருக்கு சொந்தமான கல் அரவை தொழிற்சாலை உள்ளிட்டவை இயங்குகின்றன. இத்தொழிற்சாலைகளில் இருந்து இயக்கப்படும் லாரிகளால், சாலை பழுதடைந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக மாறியுள்ளது. குறிப்பாக, தொழிற்சாலைகளில் இருந்து, லாரிகள் வெளியேறும் இணைப்பு பகுதிகள் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக, சாலையில் புழுதி பறந்து, வாகன ஓட்டிகள் கண்களை பதம்பார்க்கிறது.மண் புழுதியை கட்டுப் படுத்த அவ்வப்போது சாலையில் தண்ணீர் தெளித்தாலும், குறிப்பிட்ட நேரத்திற்கு பின் மீண்டும் மண் புழுதி சாலையில் பரவுகிறது. இதனால், இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, தொழிற்சாலை லாரிகளால் சேதமான குண்ணவாக்கம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
29-Dec-2024