/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையத்தில் நடைமேடைக்கு கூரை அமைக்கப்படுமா?
காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையத்தில் நடைமேடைக்கு கூரை அமைக்கப்படுமா?
கா ஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையம் என அழைக்கப்படும், பழைய ரயில் நிலையம் வழியாக இருந்து, அரக்கோணம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு ரயில் இயக்கப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் இங்கிருந்து ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை முழுதும் கூரை அமைக்கவில்லை. இதனால், ரயிலுக்காக பயணியர் வெயிலிலும், மழையிலும் காத்திருக்கின்றனர். எனவே, காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலைய நடைமேடை முழுதும் கூரை அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - எஸ்.வெங்கடேசன், காஞ்சிபுரம்.