உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கிடங்கரை ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் அமையுமா?

கிடங்கரை ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் அமையுமா?

கிடங்கரை கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி எதிரே ரேஷன் கடை இயங்குகிறது.இந்த ரேஷன் கடையில், அப்பகுதியை சேர்ந்த, 120குடும்ப அட்டைதாரர்கள், ரேஷன் பொருட்கள் பெற்று, பயனடைந்து வருகின்றனர்.ரேஷன் கடைக்கான கட்டடம், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், அசேபா நிறுவனத்தால் கட்டப்பட்டதாகும். இக்கட்டடம், தற்போது மிகவும் சேதமடைந்து, மழைக் காலங்களில், தளத்தின் வழியாக மழை நீர் சொட்டுகிறது.அச்சமயங்களில், ரேஷன் கடையில் இருப்பு வைக்கப்படும் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, கிடங்கரை கிராமத்தில் இயங்கும் ரேஷன் கடைக்கு, புதிய கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராஜேஷ், கிடங்கரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை