உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாலுாட்டும் அறைக்கு பூட்டு காஞ்சியில் பெண்கள் அவதி

பாலுாட்டும் அறைக்கு பூட்டு காஞ்சியில் பெண்கள் அவதி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், 2015ல், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பாலுாட்டும் பெண்களுக்கான அறை திறக்கப்பட்டது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பாலுாட்டும் பெண்கள் இந்த அறையை பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், இந்த அறையின் வெளிப்பகுதி சுவரில், எழுதப்பட்டு இருந்த, பாலுாட்டும் பெண்கள் தனி அறை என்பது அழிக்கப்பட்டுள்ளது. மேலும், பாலுாட்டும் அறை பூட்டி கிடக்கிறது. இதனால், குழந்தைகளுக்கு பாலுாட்டும் பெண்கள் மறைவான இடத்தை தேடி அலைய வேண்டிய அவல நிலை உள்ளது.எனவே, அழிக்கப்பட்டுள்ள பாலுாட்டும் பெண்கள் தனி அறை என்பதை, மீண்டும் எழுதவும், அறையை திறந்து, முறையாக பராமரிக்க ஊழியர்களை நியமிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தாய்மார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர் செந்தில் முருகன் கூறுகையில், 'காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், பாலுாட்டும் பெண்கள் அறை மூடி கிடப்பது குறித்து ஆய்வு செய்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை