மேலும் செய்திகள்
பாதியில் நிறுத்தப்பட்ட சுயஉதவி குழு கட்டடம்
23-Dec-2024
காஞ்சிபுரம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர்சுயஉதவிக் குழுக்கள்உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக. பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நாளை முதல் ஜன., 9ம் தேதி வரை, கே.பி.கே., ரத்தினாபாய் கல்யாண மண்டபத்தில் கண்காட்சி நடக்க உள்ளது.இக்கண்காட்சியில்மகளிர் சுயஉதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களான கைவினைப் பொருட்கள், கைத்தறி பொருட்கள், உணவுப்பொருட்கள், சிறுதானிய பொருட்கள், பனை ஓலை பொருட்கள் போன்றவை விற்பனைக்கு வைக்கலாம்.மேலும், கிறிஸ்துமஸ்,புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்கு வைக்கதிட்டமிடப்பட்டுள்ளது.எனவே, மகளிர் சுயஉதவிக் குழுக்களின் விபரங்களை, மகளிர் திட்ட அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
23-Dec-2024